top of page

பாரதியார்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப
தில்லையே இச்சகத்து ளோரெலாம்
எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

ஓடி விளையாடு பாப்பா

 நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா,

ஒரு குழந்தையை வையாதே பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு

 பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு

என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்று முண்டோ?

மனதிலுறுதி வேண்டும், வாக்கினி
லேயினிமை வேண்டும்; நினைவு
நல்லது வேண்டும், நெருங்கின
பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்.

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் புரிந்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்றே நினைத்தாயோ?

©2021 by தமிழ் வழிகாட்டி

bottom of page