top of page
அரிது அரிது மானிடராய்ப்
பிறத்தல் அரிது - அதனினும்
அரிது கூன், குருடு,
செவிடு, பேடு நீங்கிப்
பிறத்தல் (ஔவையார்)
சரியான எண்ணங்களை வளர்த்து விட்டால், சரியானபடி சிந்திக்கத் துவங்கிவிட்டால், வாழ்வு மகிழ்வுடன் அமையும், வெற்றிகளால் நிறையும்; சாதனைகளால் சிறக்கும் (எம். எஸ். உதயமூர்த்தி, எண்ணங்கள் புத்தகம்)
நடுக்கடலுக்குப் போய் தண்ணீர் மொண்டாலும் எந்தப் பாத்திரத்தில் மொள்ளுகிறோமோ அந்தப் பாத்திர அளவுதான் தேறும் (எம். எஸ். உதயமூர்த்தி, எண்ணங்கள் புத்தகம்)
சூரியக் கதிர்களை ஒருமுகப்படுத்தும்போதுதான் அது ச ூடுபெற்று தீயாக மாறுகிறது (எம். எஸ். உதயமூர்த்தி, எண்ணங்கள் புத்தகம்)
மனிதனின் எண்ணங்களே, மனிதனை உருவாக்குகின்றன. முடியும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மனிதன் நாளடைவில் சாதனைகள் நிறைந்த பெரும் மனிதனாய் மலர்கின்றான் (எம். எஸ். உதயமூர்த்தி, எண்ணங்கள் புத்தகம்)
எண்ணம் ஒரு தீப்பொறிபோல. ஒரு தீப்பொறி விழுந்ததும் முதலில் கனிகிறது; பின் புகைகிறது; பின் 'ஓகோ' என்று எரிகிறது. எண்ணமும் அப்படிதான் (எம். எஸ். உதயமூர்த்தி, எண்ணங்கள் புத்தகம்)
எண்ணம் தேக்கப்படவேண்டும்; வளர்க்கப்படவேண்டும்; பிறகுதான் அது வலிமை பெறும் (எம். எஸ். உதயமூர்த்தி, எண்ணங்கள் புத்தகம்)
லட்சியமில்லாத வாழ்க்கை நேற்று வாங்கிய காய்கறிபோல, மறுநாள் வாடி வதங்கிப் போகும் (எம். எஸ். உதயமூர்த்தி, எண்ணங்கள் புத்தகம்)
நினைவில் கொள்ளுங்கள். மாளிகைகள் இரவோடு இரவாக எழுந்து விடுவதில்லை; ஒவ்வொரு கல்லாக அடுக்கப்பட்டுத்தான் உயர்கின்றன (எம். எஸ். உதயமூர்த்தி, எண்ணங்கள் புத்தகம்)
வாழ்வு ஒரேயொரு நொடியல்ல, ஆனால்
ஒவ்வொரு நொடியாக வாழ வேண்டும்.
ஒவ்வொரு நொடியையும் முழுமையாக
வாழ வேண்டும் ~ ஜெ. சசிகுமார் (தேர்வுத்தமிழ் கட்டுரைகள்)
bottom of page