top of page

1. பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது ~ கண்ணதாசன்

2. உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட சிரிக்கும் ~ கண்ணதாசன்

3. வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் ~ கண்ணதாசன்

4. கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா? ~ கண்ணதாசன்

5. மாறு – மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு ~ வைரமுத்து (கோச்சடையான்)

6. பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால் ~ வைரமுத்து (கோச்சடையான்)

7. பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது ~ வைரமுத்து (கோச்சடையான்)

8. பெற்றோர்கள் அமைவது விதி;
நண்பர்களை அமைப்பது மதி

பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது ~ வைரமுத்து (கோச்சடையான்)

9. நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை – செயல் ~ வைரமுத்து (கோச்சடையான்)

10. நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும் ~ வைரமுத்து (கோச்சடையான்)

11. லட்சியம் என்பதெல்லாம் வலிகண்டு பிறப்பதடா  ~ வைரமுத்து (கோச்சடையான்)

12. தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே ~ எஸ். எம். சுப்பையா நாயுடு (எம்.ஜி.ஆர் படம் )

13. நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார்
சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்  ~ எஸ். எம். சுப்பையா நாயுடு (எம்.ஜி.ஆர் படம் )

14. காசேதான் கடவுளப்பா
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்கு கை மாறும் பணமே

உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே ~ வாலி

15. அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
 வரவுக்கு மைலே செலவுகள்
செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும்~ வாலி

16. தமிழுக்கு அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர் ~ பாரதிதாசன்

17. எட்டித்தொடும் வயது இது
ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூரியனில் செடி முளைக்கும்
புலன்களை அடக்கி வைத்தால்
தினம் புதுப்புது சுகம் கிடைக்கும் ~ நா. முத்துக்குமார் (அயன்)

18. முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ இரண்டாம் எட்டில் கல்லாதது
கல்வியும் அல்ல ~ வைரமுத்து 

19. கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவப்ரசாதம்
இதுவே எனக்குப் போதும் ~ தஞ்சை என். ராமையா தாஸ்

20. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - அது
நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் 

அன்னை வளர்ப்பினிலே ~ புலமைப் பித்தன்

21. கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன் ~ வைரமுத்து 

©2021 by தமிழ் வழிகாட்டி

bottom of page